Author Topic: என் காதல் சொல்ல..  (Read 802 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
என் காதல் சொல்ல..
« on: November 08, 2023, 07:40:15 PM »
மேகமதை பிடித்து
உன்னிடத்தில் அனுப்பி
சொல்லிடவும் துணிந்தேன்
என் காதலை

தீ சுடரை எடுத்து
தேன் துளியில் நனைத்து
உனக்கெனவே வடிப்பேன்
இப்பாடலை

கூவும் குயில் சப்தம்
கேட்டு அதை போலே
பாடிடவும் துணிந்தேன்
உனக்காகவே

வானுயர்ந்த தமிழின்
ழகரத்தை கொண்டு
உனக்காக வாழ்வேன்
என் வாழ்க்கையை
intha post sutathu ila en manasai thottathu..... bean