தத்தி தவழ்ந்து
நடை பழகும்
குட்டி குழந்தை போல தான்
உன்னுடனான என் பேச்சு
தொடர்ந்தது
சிறுக சிறுக
சேமித்தேன்
உன்னுடனான
நினைவுகளை
உன் குறுஞ்செய்திக்கும்
உன் புன்சிரிப்புக்கும்
காத்திருப்பதே வேலையாகி
போனது எனக்கு
உன் கொஞ்சல் மொழிக்கு
அடிமையாகி போனேன்
அன்பாய் இருப்பதாய் சொல்லி
இவ்வுலகில் எவரையும்
ஏமாற்றிவிட முடியும்
அன்பின் சக்தி அப்படி
இருந்தும் அது ஏமாந்தவர்களிடம்
சிக்கி சிக்குண்டு கிடக்கிறது
சரி
போலியாகவேனும்
அன்பாய் இருப்பதாய் நடித்து
என்னுடன் இருந்திருக்கலாம் என
ஏங்குகிறது மனம்
இனியெனும்
புது உறவு கிடைத்தால்
முடிந்து விட்டது என்று
சொல்லி செல்
அந்த மனமானது
சற்றுஆறுதல் கொள்ளட்டும்
சுய அலசலில்
மீண்டும் ஏமாற்றப்படுவோம்
குட்டிச்சுவர் ஆக்கிவிடுவேன்
என்ற அதீத நம்பிக்கையில்
மீண்டும்
காத்திருக்கிறது மனம்
ஓர் அன்பான
உறவிற்கு
***JOKER***