ஐப்பசி பொறந்தாக்க
அடை மழை காலம் அது
என்றொரு கூற்று உண்டு
இன்றது மாறியது
அழகிய தீபமுமே
ஏற்றிட ஒரு நாளும்
ஐப்பசி மாதம் வந்தால்
சேர்ந்தே வந்திடுமே
நரகாசூரயனையே நயமாய்
வதம் செய்த
கிருஷ்ணனின் கதைய பேசி
கொண்டாடும் தீப ஒளி
புத்ததாடை வாங்கிடவே
கொத்தாக மக்களுமே
அத்தனை கடைவீதி
மொத்தமும் வலம் வந்து
சுத்திட கிரிவலம் போல்
பாத்திட இனிக்குதப்பா..
அந்தக் கடை வீதிதனில்
கத்திடும் குழந்தையுடன்
கணவன் மனைவியென
சிறு கடை நடத்திடுவார்
தரைக்கடை போட்டுக்கிட்டு
தன் பொருள் கூவிக்கிட்டு
அவர் படும் பாடினையே
சொன்னால் புரிந்திடுமோ
பெரிய கடைகளிலே
சொன்ன விலை கொடுத்து
பொருளை வாங்குகிறார்
யாவரும் பேரமின்றி
தரக்கடை பொருளை கண்டால்
தலைக்கனம் ஏறியதாய்
தனக்குள் எண்ணி கொண்டு
பேரமும் பேசுகிறார்..
எவ்வளவு கூட்டம் உண்டு
ஆனாலும் கூவுகிற
ஏழை வியாபாரி
குரல்தான் கேக்கலையே
காசுள்ள மனிதருக்கே
கொண்டாட்டம் இருக்கிறதோ?
காசில்லா மனிதருக்கு
கண்ணீர் தான் மிஞ்சிடுமோ?
காலநிலை கூட சதி
செய்தே குறுக்கிட்டு
மழையாய் மாறி அவர்
மனம்தனை கசக்கிடுதே..
புத்தாடை மத்தாப்பு
பலகாரம் மட்டுமிங்கே
யாவர்க்கும் எப்போதும்
கொண்டாட்டம் என்றில்லை
எழை மக்களுமே
சந்தோசமாய் இருக்க
எத்தனித்து நாமும் இனி
அவர்க்கும் உதவிடுவோம்
ஏழை வியாபாரி
விற்கும் பொரும் தான் வாங்கி
அவரின் புன்னகையில்
காண்போம் தீப ஒளி..
நடைபாதை கடைகளில் பொருட்களை வாங்கி
அவருடன் நாமும் கொண்டாடுவோம்
தீப ஒளி...!!
அன்புடன் திருவாளர் பீன்