Author Topic: கண்ணீர்..  (Read 919 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
கண்ணீர்..
« on: October 30, 2023, 05:48:07 PM »
முன்னொரு காலத்துல

ராவணனும் சீதையை தான்

கடத்தி கொண்டு போக

சீதையும் கண்ணீர விட்டா..



சீதை சிந்தும் கண்ணீரையோ

ராமனுக்கு பிடிக்கலையே

சட்டென தான் ராமனுமே

சீதைய தான் மீட்டு வந்தான்..





அந்தக்கத இப்போ இங்கே

நானும் சொல்ல காரணமும்

என்னனு தான் தெரியனுமா?

சொல்லுறேனே கேட்டுக்கோங்க..



நானும் ஒரு ராமனா தான்

இப்போ இங்கே நிக்கிறேனே

எந்தன் சீதை எங்கிருக்கா ?

எனக்கும்.அது தெரியலையே..





கண்ணுல தான் கண்ணீர் வச்சு

கவலைகளை மனசில் வச்சு

எங்கோ அவ நிக்கிறது

என் மனச அரிக்கிதிப்போ ..



எதாசசும் செய்யணும்னு

எனக்கும் தானே தோணுதுங்க

செய்ய வழி இல்லையினு

மனசும் கொஞ்சம் நோகுதுங்க..



ராமன போல் மீட்டு வர

எனக்கு வழி இல்லனாலும்

காத்தாக நான் மாறி

உன் கண்ணீர தாங்குவேனே !!!



கஷ்டத்துல நீ இருக்க

காத்திருக்க முடியலனு

கவிதை ஒன்னு நான் எழுதி

உன் காலடியில் போடுறேனே !!!





உன் சோகம் தீர்க்க முடியா கவலையுடன்
திருவாளர் பீன்..
intha post sutathu ila en manasai thottathu..... bean