அம்மா! எனும் மூன்றெழுத்தும்.
அப்பா! எனும் மூன்றெழுத்தும் கூடி .
ஆறெழுத்தாய் எனை பேணிக்காத்து..
இன்முகம் காட்டி ..
ஈகை குணம் தந்து..
உலகை அறிய செய்து..
ஊர் போற்ற வாழ சொல்லி..
எளிமையை கற்று தந்து..
ஏணி போல் எனை ஏற்றி..
ஐயமின்றி வாழ செய்து..
ஒற்றுமை கற்று தந்து..
ஓதிடும் அறிவளித்து..
ஔவையின் தமிழை தந்து..
எஃகு போல் உறுதியாக்கி..
உலகிற்கு எனை அளித்த..
சிற்பிகள் இருவரையும்..
என் கலையாலே வணங்குகிறேன்🙏🙏