Author Topic: ❤️❤️ அழுகை என் ஆருயிர் நண்பன் ❤️❤️  (Read 1413 times)

Offline VenMaThI






அம்மா அடிச்சாலும் அழுதேன்
அப்பா அதட்டினாலும் அழுதேன்

பார்த்ததெல்லாம் வேணும்னு பிடிவாதமாய் அழுதேன்
பள்ளிக்கு செல்ல மறுத்து பாசங்காவும் அழுதேன்

விடுதியில் விட வேணாம்னு விம்மிவிம்மி அழுதேன்
விடுப்பு வேண்டி பொய்யா வலிக்குதுன்னு விதவிதமா அழுதேன்

விளையாட்டில் தவறி விழும்போதும் அழுதேன்
அதே விளையாட்டில் வெற்றி பெரும்போதும் அழுதேன்

நண்பர்களை பிரிஞ்ச நொடியிலும் அழுதேன்
பிரிஞ்சவங்கள மீண்டும் பார்த்த போதும் அழுதேன்

காதலனே கணவனாய் வேண்டுமென அழுதேன்
அவனால் கைவிடப்பட்டபோதும் அழுதேன்

பிரசவ வலியிலும் அழுதேன்
பிள்ளை முகம் பார்த்த போதும் அழுதேன்

பிள்ளைகளின் வளர்ச்சிகாய் அழுதேன்
மலையாய் உயர்ந்து நிற்கும் எம் மழலை கண்டும் அழுதேன்

மனசு வலிச்சப்பவும் அழுதேன்
மகிழ்ச்சியின் உச்சத்திலும் அழுதேன்

பிறந்தப்ப அழுதனா தெரியல
உசுரு பிரிஞ்சு போறப்ப அழுவனா தெரியல
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவுல
அழுகை மட்டுமே என் ஆருயிர் நண்பனாக

அழுகைய துடைக்க ஆயிரம் கைகள் கெடச்சாலும்
ஆழ்மனசு வேதனைய துடைக்க யார் வருவா தெரியல.....











Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1077
  • Total likes: 3624
  • Total likes: 3624
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அழுகை

அழைக்காமல்
வரும்
விருந்தாளி

வந்து செல்கையில்
தந்திடுவாள்
மனதிற்க்கு
சிறுது நிம்மதியை

மழலைக்கு
அது பசியின்
வெளிப்பாடு

பள்ளி பருவத்தில்
அது வலியின்
குறியீடு

வாலிபத்தில்
அது உறவு பிரிவின்
பேரிரைச்சல்

முதிய வயதில்
அதுவே வாழ்வின் இறுதிவரை
துணை

****joker****



venmathi azhgana kavithai vaazthkkal



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Mani KL

அழுகை

கிடைக்குமா?என ஏங்கும் போது அது கிடைத்தால்      ( ஆனந்த கண்ணீர் )

நினைத்தது கிடைக்காமல் போனால்
 
துயரத்தை துடைக்க யாரும் இல்லையெனில்

பசியின் அலறல்

பிரிவை சந்திக்கும் பொழுது

வறுமையை நினைக்கும் பொழுது

கொடுமைகளை பார்க்கும் பொழுது

வேதனைகளை  தாங்கும் பொழுது

தாய் குழந்தையை கட்டி அணைத்து முத்தம் இடும் பொழுது

குற்ற உணர்ச்சி மனதில் குடி கொள்ளும் பொழுது

வீண் பழியை சுமந்து செல்லும் பொழுது

கல்லறை நோக்கி  பயணிக்கும் பொழுது சொந்தங்களுக்கு கொடுப்பது

குழந்தை தொழிலாளர்களை காணும் பொழுது

வலியின் உச்ச கட்டம் அழுகை

கண்களை சுத்தம் செய்வது

கண்களின் குளியல்


















« Last Edit: October 11, 2023, 05:34:45 PM by Mani KL »