பாசத்தை பகிர
"முக"வரிகள் வேண்டுமோ
அறியவில்லை...
பார்க்காமலே காதலிக்கும்
நட்பு பறவைகள்...
பாசத்தை மட்டுமே
பகிர்ந்தோம்
பலனை எதிர் பாராமல்
உலகம் எங்கும் எம் உறவுகள்
பாசத்தை தேட
அளவிட முடியாத
பாசம் எங்களுக்குள்
பிரிவோம் சந்திப்போம் என்பது
பழைய வரிகள்
சந்தித்தோம் பிரிவில்லாமல்
இருப்போம் இறுதிவரை...