Author Topic: என்னவனே...!  (Read 1656 times)

Offline தமிழினி

என்னவனே...!
« on: April 29, 2023, 12:53:33 PM »
விலகி நிற்க ஆயிரம் காரணங்கள்
இருக்கின்ற போதும்
உன் நினைவின்றி
என் நிமிடங்கள் கூட நகராது
 அகந்தை கொண்ட போதும்
 உன் அன்பு குறைவாய் தெரியவில்லையே
விவாதம் செய்ய தெரியாமல்
 விலகி நிற்கவில்லை
விட்டுக் கொடுத்து சொல்கிறேன்
 விரைவில் வந்து சேருவாய் என்று
 வந்து சேரா விட்டாலும்
 என் காதல் என்றும் உன்னை மட்டுமே சேரும்....!

என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤