Author Topic: ❤️ நீ மட்டுமே ...!  (Read 1451 times)

Offline தமிழினி

❤️ நீ மட்டுமே ...!
« on: March 10, 2023, 05:10:33 PM »
வாழ்கின்ற வாழ்க்கை
 உனக்கானதாக மட்டுமே வேண்டும்...!
பிரிந்திடும் நிலை வந்த போதும்
 உன்னை மறந்திடா இதயம் வேண்டும்...!
காதலனாக கணவனாக நீ மட்டுமே வேண்டும்..!
அர்த்தங்கள் ஆயிரம் இருந்தாலும்
என் அன்புக்கு சொந்தக்காரன் நீ மட்டுமே ஆக வேண்டும்...!
விலகி நிற்கின்ற போதும்
உன் விக்கலுக்கு காரணம் என் நினைவுகளாக இருக்க வேண்டும்..!
இறக்கும் நிலை வந்தாலும்
உன் இரு கரங்களின் அரவணைப்பில் என் உயிர் பிரிதல் வேண்டும்..! :-[
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤

Offline சிற்பி

Re: ❤️ நீ மட்டுமே ...!
« Reply #1 on: March 16, 2023, 10:50:00 PM »
Nice
❤சிற்பி❤