Author Topic: ❤️❤️ என்னுள் நீ ❤️❤️  (Read 1058 times)

Offline VenMaThI

❤️❤️ என்னுள் நீ ❤️❤️
« on: December 31, 2022, 04:41:45 AM »




என்னவனே
உன் அன்பு என்னும் கடலில்
மூழ்கிவிட்டேன்
அப்படியே சாக கூட சம்மதமே
ஆனால்
இன்னும் இன்னும் மூழ்க ஆசை

அலையில் கால் நனைக்கும் குழந்தை போல்
ஒவ்வொரு நொடியும் பூரிக்கிறேன்
உன் அன்பு துளிகள் என் மீது படுகையில்

என் மீதான உன் காதலை எண்ணி வியக்கிறேன்
அதை என்னுள் வைத்து பூட்டிக்கொள்வேன்
யாரும் களவாட முடியாதபடி


ஒரு நொடி கூட என்னை பிரியாதே
ஒவ்வொரு நொடியும் ஒரு நாளாய்
ஒவ்வொரு நாளும் ஒரு வருடமாய்
நீளும் என் நேரம்
நீ என்னருகில் இல்லாதபோது
ஆக கனவிலும் வேண்டாம் அந்த ரணம் எனக்கு..

என்னவனே இன்றும் என்றும் என்றென்றும்
என்னருகில் அல்ல என்னுள் நீ ❤️❤️

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 220
  • Total likes: 526
  • Total likes: 526
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: ❤️❤️ என்னுள் நீ ❤️❤️
« Reply #1 on: January 26, 2023, 12:34:39 PM »
Nice.  🌹🌹🌹