தேவையானவை: ஜவ்வரிசி, சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - தலா கால் கப், தாளித்த நீர் மோர் - 4 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சப்ஜா விதையை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, நான்கு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும், சப்ஜா விதைகளைப் போட்டு இறக்கவும். ஆற வைத்து தாளித்த நீர் மோரை விட்டு, உப்பு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பருகவும். கோடைக்கேற்ற குளிர் பானம் இது.
குறிப்பு : சப்ஜா பானம்: வெள்ளரிக்காய், பூசணிக்காயை துருவி சேர்த்தால் குளுகுளுவென டேஸ்ட்டாக இருக்கும்.