Author Topic: ❤️❤ காதல் /காமம் ❤️❤️  (Read 1130 times)

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 419
  • Total likes: 1952
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
❤️❤ காதல் /காமம் ❤️❤️
« on: September 17, 2022, 01:49:57 PM »

காதல்  மூன்றெழுத்து
காமம் மூன்றெழுத்து
இச்சை மூன்றெழுத்து

காமமும் இச்சையும் சேர்ந்தால்
மனிதனும் மிருகமாகிறான்

முத்தமும் அணைத்தலும் காமம் எனின்
தந்தையும் தமயனும் தரும் முத்தம்?
தோழியும் தோழனும் தரும் ஸ்பரிசம்?

கண்டதும் வரும் காதல் மதிக்கத்தக்கது
கண்டதும் வரும் காமம்?
மிதிக்கத்தக்கது?


ஒரு பெண்ணின் மார்பகம்
காமத்தை தூண்டும் எனின்
உன் உடன் பிறந்தவளிடம்?
ஒரு பெண்ணின் தொப்புள்
காமத்தை தூண்டும் எனின்
உன் தாயிடமான உன் உறவு அது வழியே வந்ததே..

மனைவியிடம்
காதலின் வெளிப்பாடாய்
உச்சி முகர்ந்து
உணர்ச்சி பொங்க
உடன்பாடாய் வரும் காமமும் காதலே...

காதலுடன் வரும் காமம்
காலம் முழுவதும் பெருகும்
காமம் மட்டுமே இருப்பின்
அதுவே உன் அழிவின் அஸ்திவாரம்...

❤️❤️❤️❤️❤


« Last Edit: September 19, 2022, 04:07:20 PM by VenMaThI »