Author Topic: ❤️ அப்பா ❤️  (Read 1238 times)

Offline VenMaThI

❤️ அப்பா ❤️
« on: September 08, 2022, 07:28:46 PM »



அப்பா

நான் பிறந்த பொழுது தொடங்கிய பயணம்
உடனிருந்து சிரிக்கும் மழலையாய்
தத்தி நடந்த வயதில் நண்பனாய்
பருவத்தே வழிநடத்தும் தமயனாய்
துயரத்தில் தோள் கொடுக்கும் நண்பனாய்
துவண்ட போதெல்லாம் எனக்கு துணையாய்

உனக்கு நீயே ஈடு

நின் பாசம் இதயம் போன்றது
துடிப்பது வெளியே தெரியாது
ஆனால்
துடிப்பது நின்றுவிட்டால் சகலமும் நின்றுவிடும்

நீர் அழுது நான் பார்த்ததில்லை
நான் அழுவதை பார்க்க நீர் விரும்பியதில்லை
அதனால் தானா அப்பா
நிரந்தரமாக நான் அழுகையில் என்னை விட்டு போனீர்??

நீர் என்னருகில் இருக்கையில்
துன்பமும் துயரமடைந்தது
என்னிடம் நெருங்க முடியாமல்
ஏன் அப்பா அதற்கு வழி விட்டு விலகினீர்
இன்றும் என்னை விடாத கருப்பாய்
வாட்டி வதைக்கிறது

அப்பா
எல்லாரும் என் அருகில் இருக்க
நான் தனிமரமாய் திணறுகிறேன்
ஒருமுறை என்னிடம் வருவீரா
இந்த உலகமே என்னுடன் இருப்பதாய் உணருவேன்

« Last Edit: September 19, 2022, 04:27:16 PM by VenMaThI »