Author Topic: உன் நினைவுகள்  (Read 1184 times)

Offline thamilan

உன் நினைவுகள்
« on: September 05, 2022, 09:35:53 AM »
உன்னை மறக்கவே நினைக்கிறேன்
என் நினைவே நீ தான்
என்பதறியாமல்

வீணையை மீட்டும்
விரல்கள் போலே
என்னை மீட்டுவது
உன் நினைவுகளே

குளத்தில் நீர் நிரம்பி
வழிவது போலே
என் மனமெங்கும் நிரம்பி வழிவது
உன் நினைவுகளே

நான் விழித்திருக்கும் போது
நினைவாய் வருகிறாய்
தூங்கும் போதோ
கனவாய் வருகிறாய் 

நான் உயிர் வாழ
உணவு தேவை இல்லை
உன் நினைவு ஒன்றே போதும்
நான் குடியிருக்க வீடு தேவையில்லை
உன் இதயம் ஒன்றே போதும்