Author Topic: GAB நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து  (Read 1219 times)

Offline SweeTie

அன்பு நண்பனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து

அகவைகள்  தேய்ந்து  போகும்   
காலங்கள்   கடந்து  போகும் 
இளமையம்   தொலைந்து போகும்
இன்முகம்  மாறிப் போகும்  - 
GAB  என்னும்  இனிய  நண்பர்
இவர் வாழ்வில்  எதுவுமே மாறாது

அன்றும்  இன்றும்  என்றும்   இவர்
இன்முகம்  மாறாமல்   
பொலிவு    குன்றாமல்   
அனைவரையும் அணைக்கும்
அன்புள்ளம் கொண்ட தாயுமானவன்

என்றென்றும்  நீ   நீடுழி வாழவேண்டும்
GAB   நம்  அன்பும் நிலைக்கவேண்டும்
இணையத்தால்  ஒரு பாலம் அமைத்த
Engineer   நீ  நூறாண்டு வாழ்க

பல  நாட்டு  பறவைகள்   பறந்துவர
இங்கு  ஒரு   கூடாரம்  அமைத்தாயே   
நண்பர்கள்  நாடிவந்த  கூடிக்கொள்ள   
நல்லதும்  கெட்டதும்  பேசிக்கொள்ள 
அன்புதனைப் பரிமாறி 
சண்டையும்  சமரசமும் புரிந்துகொள்ள
உருவான ftc  இணையமே நீ வாழ்க !!

அன்பும்  பண்பும்  நிறைந்த  நண்பா
இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
குறைவில்லா செல்வங்கள்  பல பெற்று   நீ
நோய் நொடியற்று   நீடுழி வாழ -  நான்
நிறைந்த மனதோடு   வாழ்த்துகிறேன் !!