Author Topic: மறுபிறவி  (Read 967 times)

Offline இளஞ்செழியன்

மறுபிறவி
« on: December 03, 2021, 07:37:04 PM »
உன் மனதை காயப்படுத்தாத
என் புதிய கனிவோடு
உன்னை கட்டாயப்படுத்தாத
என் புதிய காத்திருப்போடு
உன்னை இம்சிக்காத
என் புதிய புரிதலோடு
உன்னை கறைப்படுத்தாத
என் புதிய பரிசுத்தத்தோடு
உன்னால் இம்முறை மறுக்கமுடியாத
என் புதிய காதலோடு
பழைய குருரங்களை
என் கல்லறையில் துயிலச் செய்து
கனவில் துரத்தும்
உன் புன்னகையால்
உயிர்த்தெழுந்து வந்து
உன்முன்னால் நிற்கிறேன்.
கடவுளைக் கூட
கண்ணசைவில்
மன்னித்து விடும் நீ
என்னையுன்
எல்லைக்குள் கூட அனுமதியாமல்
எட்ட நின்றே உரைக்கிறாய்
சட்டையுரிப்பதால்
விஷமில்லாமல்
போய்விடுவதில்லையென்று....
பிழைகளோடு ஆனவன்...