Author Topic: காதலி என்னை காதலி....  (Read 875 times)

Offline SaiMithran

காதலி என்னை காதலி....
« on: September 16, 2021, 10:18:13 AM »
கடற்கரையில்
கால் பதித்தேன்
உன் நினைவுகளும்
ஒட்டிக்கொண்டது...

தனிமையில்
பயணங்கள்
களைத்ததில்லை
துணையாக
உன்
நிழல்
இருப்பதால்...

சிந்திக்க
பலயிருந்தாலும்
முந்திக்கொள்கின்றாய்..நீ

காவலன்
நீயானாய்
கைதி
நானானேன்

தள்ளாடிப்
போகின்றேன்.....
தென்றலில்
தள்ளாடும்
கூந்தலைப்போல்
உன்
கரம்
கன்னத்தில்பட

விரும்பியே
தொலைகின்றேன்
விலகிவிடாதே...

என் பெண்ணே....இ. சாய்மித்ரன்
Saimithran 😄😄😄