அந்தி வானம்
அவள் வருகை பார்த்து
காத்திருந்தது ..
அந்த மின்னல் நடந்து வரும்
அழகை பார்த்து மேகங்கள்
வாழ்த்தியது...
வான்மழை தூறல்
பூமிக்கு வந்தது....
வண்ணத் தூரிகை போல்
கூந்தல் முடித்தவளும்
வாசம் தரும் மலர்கள்
சூடி வருகின்றாள்
கண்ணை கவர்ந்திழுக்கும்
கண்ணாடி மேனி
அவள் ஆடைகள் ...அந்த
வாலிபத்தை மெருகேற்றும்...
மலரும் நீரும் தொட்டது
அந்த மழைத்துளி அவள் மேல் பட்டது..
கொஞ்ச கொஞ்சமாய் அவளை ரசித்து
மெல்ல வந்து மண்ணில் விழுந்தது
மண்ணிடம் மழைத்துளி சொன்னது...
திங்கள் குளித்தது
தென்றல் நனைந்தது...
திருவிழா காலங்களில்
தெய்வங்களின் ஊர்வளம்..
இந்த தேவதையின் வருகை தான்
பூக்களின் ஊர்வளம்....
ஆலயங்கள் யெல்லாம்
அலங்கரித்தபடி காத்திருக்கிறது
அவள் தரும் அபிஷேக மலருக்காக
ஆறுகள் அவள் நினைவுகளோடு
பாதை மறந்து ஒடியது
அவள் நினைவுகளாலே
அண்டார்டிக்கா உருகியது..
கவிதைகள் கற்பனைகள்
வர்ணனைகள் என்ற
சிறிய வரையறைக்குள்
என் காதலியை சொல்லி விட முடியாது
உணர்வதில் காதல்
உயிர்ப்பதில் காதல்
அவளுக்காக இருப்பதில் காதல்
கரைத்தொடும் கடல் அலைகள்
ஓய்வெடுப்பது இல்லை
அவளின் நினைவுகள் கூட
அப்படிதான் .....
இதயத்தின் துடிப்பாக
அது இருக்கிறது...ஓய்வில்லாமல்....