எல்லோரிடமும் சொன்னேன்
அவளை நான் நேசிக்கிறேன் என்று
பிறரை நேசிக்காதே ...
உண்மையாக இரு
எத்தனை கருத்துக்கள்.....
ஆனால்
யாருக்குமே தெரியாத
இரகசியம் ஒன்று இருக்கிறது
அது...
நான் அவள் மனதில்
இருக்கும் என்னை தான்
நேசிக்கிறேன்....
அவளிடம் வெளிபடுத்தாத
எனது காதல்
என்னை எனது அன்பை
மெய்பிக்கிறது..
வெளிபடுத்திய வார்த்தைகள்
காதலின் கற்பனை
யதார்த்தங்கள்...மட்டுமே.
நீலக்கடல் வானம்
நிறைமதியின் அழகுமுகம்
இறக்கை எழில் அழகு
இவளோ பேரழகு...
காதல் கடந்த காலம்
சிலநேரம்
கண்மூடி அமர்ந்தேன்
மௌனம் தான் சிறந்தது
என் இனியவளின்
இதழ் பேச
இந்த மௌனங்கள் பறந்தது...
அந்த இதழ் முத்தம் கேட்டு
இளமையும் மலர்ந்தது
இவள் நினைவுகளோடு
சில ஏக்கங்கள் மிளிர்ந்தது...
புரியாத புதிர் இந்த வாழ்க்கை
அந்த புதிருக்கு விடை தானே யாக்கை
மயக்கத்தில் பிறக்கின்ற காதல்
மலர் மஞ்சத்தில் முடிகின்ற தேடல்...
இறை தேடும் நெஞ்சத்தில் காதல்
இதைதேடும் மஞ்சத்தில் காமம்
உயிர் போகும் வரையிலும் இருக்கும்
..........சிற்பி.....