Author Topic: பேரழகி அவள்💕 / For MoGiNi 🌹  (Read 726 times)

Offline எஸ்கே

பேரழகி அவள்💕 / For MoGiNi 🌹
« on: May 22, 2021, 10:26:11 AM »
இன்று பூவிற்கு 🌹பிறந்த நாளாம்
வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கும்
வாலிப வயது கட்டிளம் காளைகள்!
பூக்கடைகளில் பூக்கள் இல்லையாம்
ஏன் என்றால் பூவிற்கு🌹 பிறந்த நாளாம்!!
அடர் காரிகை போன்ற உன் கூந்தலில்
இடம்பெற அடம்பிடிக்கும் பூக்கள்
ஏன் என்றால் பூவிற்கு 🌹பிறந்த நாளாம்!!!

பூவின் கடைக்கண் பார்வை கிடைக்க
ஏங்கி தவிக்கும் ரோமியோக்கள்
ஏன் என்றால் பூவிற்கு🌹 பிறந்த நாளாம்!
அவள் கால் கொலுசின் ஓசை கேட்க
சொக்கித் தவிக்கும் பருவ இளசுகள்
ஏன் என்றால் பூவிற்கு🌹 பிறந்த நாளாம்!!
அவள் மேனகையின் வம்சாவளியோ
விஸ்வாமித்தரனே சொக்கி  போவான்
ஏன் என்றால் பூவிற்கு 🌹பிறந்த நாளாம்!!!

                                                                                                  - 🌹For You MoGiNi
« Last Edit: May 22, 2021, 01:58:16 PM by YesKay »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்