இது கலியுகத்தின்
கடைசி தருணம்
காலம் காலமாக
காற்றையும் நீரையும்
அழித்துகொண்டு இருந்தோம்
எத்தனை நாள் தான்
இயற்க்கை
பொறுத்துக்கொண்டு
இருக்கும்
சுவாசிக்க முடியாமல்
தினரும் போது தான்
காற்றின் அவசியம்
மனிதனுக்கு புரிகிறது...
அன்பை தான் போதித்தார்
இயேசுநாதர்
அந்த சிலுவையின் மீது
எத்தனை இரத்த கரைகள்
புத்தரின் காலடியில்
இரத்த வெல்லமாய் போனது
தமிழ்ஈழம்...😞
குர்ரானை ஓதியவன்
சர்வதேச பயங்கரவாதி
இந்த இரக்கமற்ற மனிதகுலத்தை
காப்பாற்ற நிச்சயம்
கடவுள் வரமாட்டார்
தேவாலங்களிலும்
மசூதிகளிலும் வெடிவைத்து தகர்த்தபோது
வராத கடவுள்
வீடுகளிலும் மருத்துவமனைகளிலும்
மனிதர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது
வரப்போகிறாரா....
ஒன்றிணைந்த போராட்டங்களால்
நமக்கு சுகந்திரம் கிடைத்தது
ஒன்றிணைந்த கருத்துக்களால்
பூமியில் புரட்சி வெடித்தது
ஒன்றிணைந்த போர்கலத்தில் தான்
வெற்றிகளும் கிடைத்தது...
அதுபோல
ஒன்றிணைந்த கட்டுபாடுகள்
மட்டும் விழிப்புணர்களால்
மட்டுமே..
உலகத்தை மீட்டெடுக்க முடியும்...
.......சிற்பி...