கன்னியரின் கருவிழியில்
கலந்துவிட்ட மயக்கத்தால்
காதலெனும் போதையிலே
காலமகள் உயிர்கொடுத்து
தேகசுகம் நிறைந்துவிட
தனைமறந்து தனைமறந்து
பேதலித்த புத்தியிலே
காதலித்து காதலித்து
கவிஞன் மனம்
வாழ்ந்திருக்கும்....
பிரிந்தவளும் போனாலும்
கவிந்தமனம் சாவதில்லை
அவளுடைய வாழ்க்கையிலே
அர்த்தங்கள் ஏதுமில்லை
கவிஞர்களின் தனிமையிலும்
ஏகாந்தம் நிறைந்திருக்கும்
மரபுவழி வந்த உயிர் அணுவில்
ஒரு கவிதை வரும்
அந்த திங்களை பிரிந்துவிட்டால்
தென்றலும் ஒரு தீயாகும்...
மகரந்த காடுகளில்
மலரிதழ்கள் பேசிக்கொள்ளும்
கவிஞர்களின் நினைவுகளோ
தன் மனதோடு ஊடல் கொள்ளும்
காதலெனும் தீயதுவோ
ஒருகணத்தில்
பற்றிவிடும்
உயிர் தொட்டு உடல் பட்டு
பின் .......
ஒராயிரம் ஆண்டுக்கு
கவிதைகள் வாழ்ந்திருக்கும்
......
.........சிற்பி...