Author Topic: மாய உறவுகள் !  (Read 829 times)

Offline AgNi

மாய உறவுகள் !
« on: March 08, 2021, 09:16:06 PM »

தொலை தூர மலை முகடுகளில்
தெரியும் பிம்பங்கள் அருகே சென்று பார்த்தால் ..
அவை கலைந்துபோன மேக கூட்டங்களாய்...
நெடுஞ்சாலை தண்ணீரில் ..
மீன் பிடிக்க பாயும் கொக்குகள் ...
ஒரு போதும் தாகம் தணிக்க
நெஞ்ச குளத்திற்கு வருகை தருவதில்லை ! 

தேநீரில் விழுந்த வண்டுக்கு தெரியுமா
அதையும் ருசி என மகிழ்வர் என்று
வேனில் கால காற்றுக்கும்
விசிறிகள் உண்டு இங்கே !
எங்கோ கூவும்    குயில்களுக்கு
தன் குஞ்சு எங்கு போயிற்று என்று
தெரியாமலா   இருக்கும் ?

வாழ்கை  சக்ரத்தில் வாள்கள் இங்கே
துரு  பிடித்து கிடப்பதால்...
உறவு போர்கள் நித்தம்  நித்தம்
தோல்வியையே சந்திக்கின்றன !

சாஸ்வதமிலா  நிழல்களை பிடித்து  வைக்க
உள்ள கதறல்கள் தேவை இல்லை !
உண்மையான உறவுகளுக்கு
மெனக்கெடல்கள் தேவையும் இல்லை !

காலம் காலமாய் கட்டி வைக்க பட்டுருக்கும்
உறுதி அணைகளை உடைக்க
நெருக்கமானவர்களின் ஒரு சிறு  விலகல்
போதுமானதாய்  இருக்கிறது !

தன் இருப்பை தானே பறை சாற்றி கொள்ள
சோக குயிலின் கீதம் உதவி செய்கிறது
மன  குரங்குகளின் ஆட்டம்  நிறுத்த
சிறு கேளிக்கை சேட்டை போதும் !

கல்லில் தெரியும் உருவங்களை ரசிப்பவர்க்கு
எரியும் உளியின் வலிகள் தெரிய நியாயமில்லை !
மனதுக்கும் மனிதத்துக்கும் மரணம் இல்லை
இங்கு என்றும்  அன்புக்கும் பஞ்சமுமில்லை !