Author Topic: பாடும் நிலாவே SPB...  (Read 1659 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1089
  • Total likes: 3656
  • Total likes: 3656
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பாடும் நிலாவே SPB...
« on: September 26, 2020, 05:22:39 PM »
பாடும் நிலாவே S.P.BALASUBRAMANIAN

எங்கள் செவிகளில் அதிகம்
ஒலித்தது
உங்கள் குரல்

பல நாட்கள் பல பயணங்களில்
ராஜாவின் இசையுடன்
எங்களுக்கு கூட்டாய்
பயணித்தது
உங்கள் குரல்

எத்தனை எத்தனை
பாடல்கள்
எத்தனை  எத்தனை
மொழிகளில்
அத்தனையும்
தேனாய் பாய்கிறது
எங்கள் செவிகளில்
உங்கள் குரல்

பாடலுக்கு
உயிரூட்டி
உணர்வூட்டி
மெருகேற்றி
நடிப்பவர்க்கு
எளிதாக்கும்
உங்கள் குரல்

உங்களை கண்டு
கற்கவேண்டியது
பாட மட்டுமல்ல
உங்களின்
மனிதாபிமான
குணமும் கூட

உங்கள் மறைவு
எங்களுக்கு
பேரிழப்பு

..இதோ இப்பொழுதும்
ஒலித்து கொண்டிருக்கிறது

"நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா"

நீங்கள் பாடிய பாடல்கள் காலத்தை கடந்து
ஒலித்து கொண்டிருக்கும்

என்றும்
எங்கள் செவிகளில்
உங்கள் குரல்




WE MISS YOU SPB

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

Re: பாடும் நிலாவே SPB...
« Reply #1 on: September 27, 2020, 02:50:25 AM »
நீங்கள்  மரணிக்கவில்லை
எங்களுடன் நித்தமும்  வாழ்கிறீர்கள்
எங்கள் உயிரில்  ஒன்றர  கலந்தவர்
நீங்கள் மறையவில்லை   SPB  Sir
நாங்கள்  வாழும்வரை    எங்களுடன்
பயணித்துக்கொண்டே  இருப்பீர்கள்!!!.
 
« Last Edit: September 27, 2020, 08:16:11 AM by SweeTie »

Offline Ayisha

Re: பாடும் நிலாவே SPB...
« Reply #2 on: September 27, 2020, 07:35:05 AM »
RIP SPB sir. You always have the special place in our heart. Nobody is could replace you in our heart. Well love u and we miss you sir. Surely the release of "Annathe song" will make us on tears 💔.
#SPBFOREVER