Author Topic: ஆஸ்பிரின் உபயோகம் கான்ஸரை தடுக்கும் – ஆய்வில் தகவல்!  (Read 872 times)

Offline Yousuf


வலி நிவாரணியான ஆஸ்பிரினை தினமும் உபயோகிப்பது புற்றுநோய் பீடிப்பதை தடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. விஞ்ஞான பத்திரிகையான த லான்ஸெட்டில் வெளியான இதுத்தொடர்பான 3 கட்டுரைகளில் ஆஸ்பிரினை தினமும் குறைந்த அளவில் உட்கொள்வது புற்றுநோயை தடுக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கூடுதல் பிரபலமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆஸ்பிரினை தினந்தோறும் உபயோகிப்பது பக்கவிளைவுகளை அதிகரிக்கச் செய்யும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ரோத்வெல்லும், குழுவினரும் ஆஸ்பிரின் உபயோகம் புற்றுநோயை தடுக்கும் என கூறுகின்றனர்.

தற்போது 77 ஆயிரம் பேருக்கும் அதிகமான நோயாளிகளிடத்தில் நடத்தப்பட்ட 51 சோதனை ஆய்வுகளின்போது ஆஸ்பிரின் மருந்தினால் 3 இலிருந்து 5 ஆண்டுகள் வரையான காலப்பகுதிக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பேராசியர் பீட்டர் ரோத்வேல் தலைமையிலான விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதய நோயாளிகளில் 1000 பேரிடம் நடத்திய ஆய்வில் வெறும் ஒன்பது பேருக்கே புற்றுநோய் பீடிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்பிரின் உபயோகிக்காத நபர்களில் 1000 பேரில் 12 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

75 முதல் 300 மைக்ரோ கிராம் வரை தினந்தோறும் அஸ்பிரின் உட்கொண்டவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் புற்றுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்பகுதி  அளவு குறைந்திருந்தது.

புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் 5 ஆண்டு காலப்போக்கில் 15 வீதத்தால் குறைந்திருப்பதாகவும் அவ்வாறே ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் ஆஸ்பிரினை தொடர்ந்தும் எடுத்துக்கொண்டால் உயிரிழப்புகளின் வீதத்தை மேலும் 37 வீதத்தால் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் வயிற்றுக்குள் இரத்தக் கசிவுகள் ஏற்பட இந்த நீண்டநாள் ஆஸ்பிரின் உபயோகம் காரணமாவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொதுவாக புகைத்தல், மது உள்ளிட்ட போதை பொருட்களை அருந்துதல், சீரான உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் ஆகியவற்றால் இதயநோய், புற்றுநோய் போன்ற ஆபத்துக்களில் இருந்து இறைவன் நாடினால் தடுத்துவிடலாம் என்பதுதான் நிதர்சனம் என்பதை நாம் உணர்ந்துகொண்டால் நல்லது.