Author Topic: உன்னால் முடியும் தம்பி தம்பி  (Read 848 times)

Offline thamilan

நண்பனே
கைகளோ கால்களோ
முடங்கிப் போனதை எண்ணி
கண்ணீரும் கவலையுமாக
மூலையில்  முடங்கி கிடைக்காதே

கால்கள் அற்ற மேகம் வான்முழுவதும்
தவழ்ந்து வருவதில்லையா
மழையை பெய்து
உலகை செளிர்விக்கவில்லையா

முயற்சிகள் உன்னிடம்
முடங்காமல் இருந்தால்
உயர்ச்சிகள் உந்தன்
முகவரி தேடி வரும்   

உன் தோல்விக்கு காரணம்
விதியென்று சொல்லாதே
விடாமுயற்சி செய்
அதுவே வெற்றியின்
நிரந்தர மூச்சு