Author Topic: ஒரு பித்தனின் பிதற்றல்  (Read 900 times)

Offline thamilan

பூங்காவில் பூவாசம்
பேனாவில் மைவாசம்
மைனாவே என்மனதில்
உன் வாசம்
மைவிழியால் என்னை கொல்லாதே
நீ ரொம்ப மோசம்

உன் பல் பட்ட
பாவைக்காயும் இனிக்குதடி
உன் காணப்படாத
கற்கண்டோ கசக்குதடி
கவிஞனின் கையில் பேனாவாக
இருப்பதை விட
காதலியே உனது கூந்தலில்
பேனாக இருக்க விரும்புகிறேன்

என் ஆயுள் ரேகையும்
அதிர்ஷ்ட ரேகையும் பார்த்து
பலன் சொல்கிறார் ஜோசியர்
என் ஆயுள் ரேகையும்
அதிர்ஷ்ட ரேகையும்
நீ தான் என்பது தெரியாமல்