ஒரு முறையேனும்
என்னைப்பற்றி நீ
யோசித்திருந்தால் …….
ஒரு முறையேனும்
உன் பெண்மையை நான்
இடரியிருந்தால்……..
ஒரு முறையேனும்
என்னைப்பார்த்து நீ
வெட்கப்பட்டிருந்தால் ……
ஒருமுறையேனும்
என்நினைவுகள் உன்னை
பரவசப்படுத்திருந்தால் ……
ஒருமுறையேனும்
என்நினைவுகளுடன் நீ
உறங்கியிருந்தால்
(விழித்திருந்தால் )……
சத்தியமாய்
உனக்குள் நான் …..