சில நேரங்களில்
நாம் தோற்று போனாலும்
முடிவுகளை விட 
முயற்ச்சிகளே அழகானது
பகைமை பார்க்கும்
 சிலர் நெஞ்சம்
பணிவை தாங்கும் 
சிலர் நெஞ்சம்
பொய்மை போற்றும்
சிலரோடும்
நேர்மை காக்கும் 
சிலர் நெஞ்சம்
ஆசை கொள்ளும் 
நெஞ்சங்கள் 
அங்கும் இங்கும்
அலைகிறது
அமைதியான உள்ளங்கள்
உண்மையில் இங்கே 
வாழ்கிறது 
பிறக்கும் உயிர்கள் 
அத்தனையும் 
உனக்கும் எனக்கும் 
சொந்தம் தான் இதை
பிரிக்கும் மனிதன்
மனுதர்மம் அதை 
அழிக்கும் நமது
சமதர்மம்
வாழ்க்கை முழுவதும்
போராட்டம்
சிலர் வாழ்க்கை 
பயணம்
நீரோட்டம்....
சின்ன சின்ன 
மோதல்கள்
பெரிய பெரிய 
தேடல்கள்
சோகங்கள் ஒரு
சுகமாக
அந்த நினைவுகள்
இங்கே என் 
வாழ்க்கை யென.....
நாளை என்ற
நாளை மட்டுமே
நம்பி எனது 
பயணம்.....
         சிற்பி...