நம் ராஜ்ஜியமாம்
நண்பர்கள் ராஜ்ஜியத்தில்
அரசவை கவிகளான
அழகாய் கவி பதிக்கும்
அகிலத்து தேவதையும்
அரும்தமிழில் கவி புனையும்
கவிதா(யனி)களும் ஒருபுறம்
மறுபுறம்
கவிராஜன் ஆசையும்
கவி இளவல் தமிழனும்
இளங்கவிகள் பலரும் வீற்றிருக்க
இக்கிருக்கனின் கிறுக்கலை
கவி அரங்கில் பதிந்து
அரங்கேற்றம் நிகழ்த்திட ஆசை
அது பேராசையும் கூட
ஆனால் என் ஆசையெல்லாம் நிராசையாய்
இவர்களுடையும் பதிப்புகள் அனைத்தும்
முத்தாய், தமிழின் நல்ல சொத்தாய்,
சத்தாய் வரும் வரிகளை கண்டு
மெய்மறந்து
முற்றிலும் சத்தில்லாத வரிகளை
பதிப்பதையே நிறுத்தி கொண்டேன்...