Author Topic: உழவு படும் பாடு  (Read 1758 times)

Offline Reece

உழவு படும் பாடு
« on: November 18, 2019, 01:16:03 PM »
நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் ஏரினால்
ஏனோ அதைத் தாங்கும் உழவனின் வாழ்வாதாரத்தை 
மாற்ற இயலுவதில்லை!! இது ஏரின் சாபமா?

உழவனாய் பிறக்கும் வரமளித்த இறைவா
ஏன் கூடவே ஏழ்மை எனும் சாபத்தை உடனளித்தாய் ?
தான் பட்டினியாயிருந்தாலும் உலகிற்கே அன்னமளிப்பான்
இரக்கமற்ற இறைவா அவன் உன்னிடம் வேண்டுவது
பணமோ பொருளோ வீடோ வாசலோ இல்லையே ?
விவசாயம் செய்ய தண்ணீர் !

தண்ணீரால் நிறைந்த வயல்கள் மீது
இன்று வெறும் கண்ணீர் துளிகள்
கண்ணீரில் பயிர்கள் விளையும்மென்றால்
கழனியை நிறைந்திருக்கும் அவனது கண்ணீர் 
இறைவனுக்கு தான் இரக்கம் போனது
இயற்கை அன்னையே உனக்கும் என்னதான் சினமோ
அவன் மீது ?

சுழன்றும் ஏற்ப் பின்னது  உலகம்
என்றான் வள்ளுவன் ஆனால் உலகம் சுற்றும்
வேகத்தில் ஏர் மறித்துப்  போவதை யாரும்
கண்டுகொள்ளவில்லை கண்டும் காணாததுமாய்!

இந்த நீர்ப்பற்றாக்குறையை உழவனின் துயரமாய்
நினைத்தால் நாமே ஏமாளி
விளிம்பில் இருப்பது விவசாயம் மட்டுமல்ல
நம் வருங்கால சந்ததியின் வாழ்க்கையும்தான்
இனியாவது ஊரெங்கும் நீரினை சேமிப்போம்
உழவனுக்காக அல்ல நம் சந்ததிக்காக !

விளைநிலங்களை கூறுபோடும் அரசாங்கமே
நாளைக்கு சோறு போடப் போவது விளைநிலங்களே
தன் முதுகெலும்பை முடமாக்கி எவனும் முன்னேறப் போவதில்லை
உணவிற்காக பிறநாட்டிடம் கையேந்தும் நிலையை மாற்றிடு! 

தேவையற்ற திட்டங்களை விலக்கி
நாடெங்கிலும் தண்ணீரை சேமிப்போம்
ஏரிகள் குளங்கள் குட்டைகள் அமைத்து நீர்வளம் காப்போம்
ஏனெனில் உலகில் உயிர்கள் உள்ளவரை
என்றும் உழந்தும் உழவே தலை!