Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 229  (Read 2715 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 229
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   VIBES அவர்களால்       வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Guest 2k

உருகும் மனதின் மெழுகுவர்த்திகள்

முடிவிலியென நீளும் இரவில்
மெழுகுவர்த்தியின்
சிறு வெளிச்ச அலைகள்
நினைவுகளை சிதறடித்து செல்கின்றது
மனதின் உறைநிலைகளை
கடந்து செல்லவியலாத தருணங்களை
நிழலென காட்டும்
வெளிச்சக்கீற்று
நினைவடுக்குளின் இருள் ஓரங்களை
கீறி காட்டுகிறது.
எத்தனை தேநீர் சந்திப்புகள்,
எத்தனை விலகி நிற்தல்கள்,
எத்தனை கைக்கோர்ப்புகள்,
எத்தனை கை உதறல்கள்
கடுஞ்சொற்களும், தலையணை விசும்பல்களும்
நினைவுகளை மீறி வெளிப்படும்
பின்னிரவில்
ஒரு எரிநட்சத்திரமென ஒளிர்கிறது
மெழுகுவர்த்தி.


வானம் மீறி எங்கு பறந்தாலும்
இரவில் கூடடையும் பறவை போல்
கைநீட்டி அழைக்கும் இருளுக்குள்
மனச்சிறகுகளை சுருக்கிக்கொண்டு
தஞ்சமடைய விழைகிறது மனம்
இருளைவிட சிறந்ததொரு
இளைப்பாறும் மடியில்லை.
இது தான் சாசுவதமென இருளின்
புகலிடம் தேடும் நொடியில்
தோன்றுகிறது மெழுகுவர்த்தியின்
சிறு வெளிச்சக் கீற்று.
துன்புறுத்தும் மெழுகுவர்த்தியின்
வெளிச்சக்கீற்று
கசிந்துருக்கும் மனதை எவ்விதத்திலும்
ஆற்றுப்படுத்துவதில்லை.
துரோகங்களையும், மனதை கலைத்துப்போடும் மனிதர்களின்
தந்திரங்களையும்,
நட்பெனவும் காதலெனவும்
தோன்றும் காட்சிப்பிழைகளையும்,
குற்றவுணர்ச்சிகளையும்
நம்பிக்கையற்ற நிலைகளையும்
சொற்களற்று ஆழ்ந்திருக்கும் மௌனங்களையும்,
அத்தனையும் நாடகம், அத்தனையும் நாடகம் என கூவும்
உடைந்த கண்ணாடி சில்லுகளாய்
இருக்கும் மனதையும்,
வெளிச்சமிட்டு காட்டும் மனதின் மெழுவர்த்தியை
மிகத் தீவிரமாக வெறுக்கிறேன்


சிலசமயங்களில்
இருளினூடே வழிந்தோடும் சிறு வெளிச்சக்கீற்றுகளும்
தேவையானதாக இருக்கிறது.
இருள் மறைக்கும் பிம்பங்களை
நிழலலென காட்டும் ஒளியில்
புதியதொரு ஆறுதல் பிறக்கிறது
தனித்துவிடப்படவில்லையென.
சிலசமயங்களில்
இருளினூடே வழிந்தோடும் சிறு
வெளிச்சக்கீற்றுகள்
தேவையற்றதாக இருக்கிறது,
மறக்க விரும்பும் நினைவின் சுவடுகளை
நிழலலென காட்டும் ஒளியில்
புதியதொரு பயம் பிறக்கிறது
மீண்டும் தனித்துவிடப்படுவோமென.
இருளும் ஒளியும் கலந்து நிற்கும்
குழப்பமானதொரு தருணத்தில்
மெழுகென கரைந்துருகி கொண்டிருக்கும் என்
மனதின்
மீதொரு மற்றொரு வெளிச்சத்தின்
சாயல் விழுகிறது.
மீண்டும் மீண்டுமென காயங்களை
தாங்கி நிற்கும் மனதிற்கு
மெழுகை போல் உருகி நிற்கும் சாயல்,
அது
மீண்டும் உருகி
மீண்டும் உருகி
மீண்டு நின்று
பின் மீண்டும் உருக தயாராகி இருக்கும்.
மெழுகினை போன்ற மனதிற்கு
இருளும், வெளிச்சமும்
சாசுவதமென விளங்கும் கணம்
அங்கே மெழுகென உருகிக்கொண்டிருந்தது
சர்வநிச்சயமாய்
நான் தான்
« Last Edit: September 22, 2019, 11:28:04 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline ShaLu

இறைவன் படைத்ததிலேயே
மிக சிறந்த படைப்பு பெண்கள்
மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
பேதை, பெதும்பை, அறிவை , தெரிவை
பேரிளம்பெண்
என்று பல இனிமையான
பருவங்களை கொண்டவள் பெண்

இவ்வுலகை படைத்ததில்
கடவுளுக்கு நிகராக
இன்றியமையாத பங்களிப்பு
பெண்களின் பங்களிப்பே
நம்மை கருவாக்கி
உருவாக்கி, பிறப்பு கொடுத்து
பூமியில் பிறக்க செய்தவள் பெண் 
ஓர் ஆணின் முதல் பாதி வளர்ச்சியில்
தாயாக முக்கிய பங்காற்றுவது பெண்
பிற்பாதி வளர்ச்சியில் மனைவியாக இருந்து
வழி நடத்துபவள்  பெண்
தாயாக, மனைவியாக
மகளாக , சகோதரியாக
வாழ்வை அர்த்தமுள்ளதாய்
ஆக்கியவள் பெண்   

தன்னையே மெழுகுவர்தியாகி, உருக்கி
தன்னை சார்ந்திருப்பவரின்
வாழ்க்கையில் இருளை நீக்கி
ஒளி ஏற்றுபவள் பெண்

பலவீனமானவர் யார் என்றால்
பெண் தான் என்பர் பலர்
ஆனால் ஆண்களை விட
பலமாய் இருப்பவர்கள் பெண்கள்
பிரசவத்தின் வலியை விட
மிகச்சிறிய உதாரணம் இல்லை
பெண் வலிமையின் மருஉருவம்
என்பதை பறை சாற்றிட

இன்றைய சமூகத்தில்
பெண் இனமோ  பெருங்கொடுமையில்
பெண்கள் வீட்டை விட்டு  வெளியேறவே
பதைபதைக்கும் சூழலில்
பாதுகாப்பின்றி போனது
பாழ்பட்ட சமூகம்

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்
என்றான் பாரதி
ஆனால் இச்சமுதாயமோ
கொளுத்துவது  மடமையை அல்ல
நம் மதிப்பிற்குரிய  மாதர்களை

மனித இனமே
மாதர்களை போற்றி பாதுகாக்காவிடினும்
தூற்றி மிதிக்காமல் இரு -ஏனெனில் 
அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது !!!
]
« Last Edit: September 22, 2019, 11:17:21 AM by ShaLu »

Offline சிற்பி

வியர்வை துளிகளில்
விளைந்தது சிரிப்பு
கண்ணீர் துளிகளில்
கரைந்து போனது இதயம்
இங்கே மறைந்து போனது
மனிதம்...
பெண்ணியம் பேசும்
புண்ணிய பூமியில்
பண்ணிய பாவங்கள்
எத்தனை எத்தனை....

இவளுக்கு...
இதய அறைகள்
சிதைந்து போனது...
பேச்சிலே ஒரு
சுதந்திரம் இல்லை
பேனாவும் இவள்
ஆயுதம் இல்லை
எண்ணங்களை பேச
சுதந்திரம் இல்லை
சட்டத்திலும் ஓர்
சமநிலை இல்லை
எதிர்ப்புகளை தாண்டி
அவள் ...... போனாலும்
தகுதிகளும் முயற்ச்சிகளும்
இருந்தாலும் இவள்
நிராகரிக்க  படுகிறாள்...

எத்தனை நதிகள்
அத்தனைக்கும் அவள்
பெயர்கள் ...
பிறவி பெருந்துயர்
நீக்கிடுவாள் கங்கை...
எத்தனை பிணங்கள் அந்த
புணித நதியின் கரையில்
அத்தனைக்கும் அவள் விமோசனம்
தருகிறாள் தன்னை தானே
அழுக்காக மாற்றிக் கொண்டு....
காவிரியின் வருகையில்
தமிழ்நாடு வளம் பெருகும்

காதலியாய் ஒருத்தி
கவிதையிலே ஒருத்தி
மனைவியாக ஒருத்தி
மனதோடு ஒருத்தி
அன்னை என ஒரு பெண்
பிள்ளை யென அவளே
பிறப்புக்கும் அவளே
அந்த இறப்புக்கும் அவளே


பெண்னே நீ வாழ்க.........
ஒவ்வொரு பெண்ணின்
வெற்றியிலும்
பெண் சமுகத்தின்
மாபெரும் வெற்றி காத்திருக்கிறது...
................. சிற்பி.......




Offline சாக்ரடீஸ்

பல நாட்கள் முன் எழுதிய கிறுக்கல்
இன்று
ஓவியம் உயிராகிறதில்
உயிர் பெற போகிறது ...


விலைமதிப்பில்லா விலைமகள்  ...

தினம் தினம் கட்டில் இடும் கைப்பாவை
ஆனால் என்ன பாவமோ
தொட்டில் இட  முடியாத
துரதிஷ்டசாலி
அழுகி போகும் தேகத்திற்கு ஒப்பனை செய்து
அரங்கேற்றும்  கைப்பாவை ..

காவியம் சொல்லும்
அன்பு கூட இங்கு தனத்திற்கு விலை போகும்
ஆசை பார்வைகளும் இங்கு உண்டு
இதழ் ஓர வெட்கங்களும்  இங்கு உண்டு
இதயம் என்ற வார்த்தைக்கு
இங்கோ  மிதியடிதான் மிச்சம் ...

என்ன பாவம் செய்தார்கள் இவர்கள் ...
உயிரை வளர்க்க தேகத்தை விற்றிடுவாள்
தோல் சுருக்கும்வரை தேனாய் இனித்திடுவாள்
தேகம் பார்க்க
ஒழுக்கம் என்னும் போர்வையில்
ஒளிந்துகொண்டிருக்கும்
சில குள்ளநரி கூட்டத்தின் பசி  தீர்ப்பாள்
விலை மதிப்பில்லாத இவள்
இதயத்தை பார்க்கத்தான் ஆள் இல்லை
பல மனித  மிருகங்கள் வேட்டையாட
தானாய் வலையில் சிக்கும்
புள்ளிமான்...
தன்னை தானே எரித்து கொண்டு
மெழுகுவர்த்தியாய்  உருகி
பல பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சமாய் இருப்பாள்
ஆனால் இவள் வாழ்க்கையோ
என்றும் இருட்டறையிலே முடிகிறது
பல பெண்கள் மானத்துடன்
வாழ இவள் செய்யும் தியாகத்திற்கு
இந்த சமுதாயம் இவளுக்கு சுட்டிய பெயர்
விபச்சாரி...!

பெண்களாக பிறந்தது இவர்களின் தவறா?
இந்த பெண்குலத்திற்கு என்று வரும் விடியல்
பெண்களை போதை பொருளாக
மாற்றியது இந்த சமுதாயம்
...
பெண்களே
இது அதிகாரத்தை கையில் கொண்டு
அடக்கும் சமுகம்
நீயே வீறுகொண்டு எழு
இல்லை என்றால் மண்ணோடு புதைந்திடுவாய்....

விலைமதிப்பில்லா விலைமகள்  ...


Offline JasHaa

இருளாய்  கிடந்த  அவளது வாழ்வின்  வெளிச்சக்கீற்று 
ஒளியை கண்ட நொடிகளில் துவக்கத்தில்   
கோடைமழையாய் ஆர்ப்பரித்த  இதயம் 
வெள்ளிச்சதகையாய் சிணுங்கி  தவித்தது 
கேளடி தோழி !  எத்தனை நாள் ஏக்கமடி 
மண்ணிலே மங்கையாராய் பிறக்க மாதவம் செய்தேனடி !
மகரந்தமாய்  சேமித்தேனே கனவுகளை
தேன்துளியாய் ஆசைகளை 
கர்வமாய் காதலை
தலைகனமாய் அன்பு எனும் ஆயுதத்தை ...

அவனில் எனை தொலைத்து அவனை  சேமிக்க  விழைந்தேன் 
அந்திமாலையில்  தேநீர் கோப்பையுடன், 
துளி  துளியாய்  உள்சென்ற  தேநீர் சுவையாய்  விட
அவனது  கள்ளப்பார்வையில் தித்தித்தது ...

புயல்காற்றிலும் புன்னைகையோடு  வலம் வர  தயார்
உடன்   பயணிப்பது  அவன் எனும்போது

இதயம் துண்டாடபடும் தருணங்களிலும் எதிர்கொள்ள  தயார்
தலைகோதும்  விரல்கள்  அவனது எனும்போது 

மெழுகாய்  உருகி  கரைய  தயார்  எனது வாழ்வு 
அவனுடன்  எனும்போது

வலிகள் தானா வாழ்க்கை  ?

தன்னையே உருகி வெளிச்சம்  படைக்கும் மெழுகுப்பூ...
உருகி வழியும் அவளது வேர்வைகள் வேதனைகள் அல்ல !
வேதனைகளை   சாதனையாக்கும் அவளது தனித்துவம்
தன்னையே செதுக்கி  கொள்ளும் வித்தாகி  அவள் !

காதல் ஒருவனை  கைப்பிடித்தால்  கண்ணீரையும் 
தேனாய்  தித்திக்க  வைப்பாள்
அவளே  பெண் !!
கல்கியாய் உருப்பெறுவாள்  உருகி  வழிந்தாலும் !!!

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
வெண்ணிற தேகத்தில், இருள் நீக்க வந்த
இளவரசி அவள் "மெழுகுவர்த்தி"

இருள் நீங்க இறையாகினேன்,
ஒளி தந்து உறவாகினேன்.

எளியோர் உயர்வு தனை ஏட்டினில் காண,
என்னுயிர் தந்தேனும் உன்னுயிர் காப்பேன்.

நான் உருகும் கணமெலாம்,
உன் உயர்வு தனையே நெஞ்சினில் சுமந்தேன்.

என்னை உருவகித்தவனும் எளியவனே,
எனை அதிகம் உபயோகிப்பதும் எளியவனே.
என்றும் எளியவரின் உறவாளராக நான்.

உன் கவலை தனை நீக்கிட, நான் கண்ணீர் சிந்துகிறேன்,
உன் விடியலை நோக்கியே என் பயணம்.

ஏழ்மையில் பிறந்தேன், ஏழையின் இருள் நீக்கிடவே.

இருள் சூழ்ந்த இடத்தினை மட்டுமல்ல,
 இருளில் மூழ்கிய இதயங்களையும்
ஒளிர்விக்கவே நான் கொண்ட ஜீவகம் இது.

எனக்கென்ன ஒரு நிலைகொண்ட அடையாளம் இல்லை என்ற போதிலும்,
உனக்கென்ன ஒரு அடையாளத்தை பதிக்கவே உடலுறுகி மாய்ந்தேன்.

உன் உறவாக நான் இருப்பது, என் கண்ணீர் துடைப்பாய் என்றல்ல,
நான் சிந்திய கண்ணீருக்கு அர்த்தம் சொல்வாய் என்று....MNA...............
« Last Edit: September 23, 2019, 10:53:03 AM by Unique Heart »

Offline SweeTie

என்னை
நானே உருக்கி கொள்கிறேன் 
தேவையற்ற சிந்தனைகளால்  உருகி போகிறேன் ,
நம்பிக்கை என்ற நய வஞ்சகத்தால்
தியாகம்  என்ற  தீ  சுடரால்
அன்பு  என்ற  அர்த்தமற்ற போர்வையால்
நான்  என்ற  அகந்தையால் 
மாய வலைகளில்  சிக்குண்டு  சீரழிந்து
மாய்ந்து  போகிறேன்.

பிறப்பின் ரகசியம்  புரியவில்லை
இறப்பின்  அர்த்தமும்  தெரியவில்லை
நடுவில்  நீரோட்டத்தின்  அலைவரிசைகளில்
நீந்தி பிழைக்கும் இந்த  நாடகம் 
நாளும் பொழுதும்   நெஞ்சில் வெதும்பும்
பொறுமல்களும்  ஏக்கங்களும்
வெடித்து  சிதறிப்போகின்றன
சுவாலையில்   உருகும் மெழுகுவர்த்தி
சிந்தும்  மெழுகு  துளிகள்போல்

காலமெல்லாம் உருகி உருகி 
காற்றிலே கரைந்துவிடும்  நினைவுகள்
அர்த்தமில்லா  உறவுகள்  ...என்றோ
தொலைந்துவிடும் எனத் தெரிந்தும் ,,,,
தெரியாத மனப் பிரமைகளுடன்
வாழப் பழகிக்கொள்ளும்  பக்குவம் 
கொண்ட  வெறும்  மட் பொம்மை
அந்த மெழுகுவர்திள்போல்

காலம் சிறிதென்றபோதும்
கடமைகளை மறக்காமல் 
கோலம்  போடும்  அறியாமை
எரிகிறது  மெழுகுவர்த்தி   
அணைக்க வினயும்  வாயுதேவனின்
பிடியில் விலக  எத்தனிக்கிறது
போராட்டத்தின் எல்லை
இதயத்தின் சுமையாகிறது 
சுமைகள் தரும் வலிகள்
கானல்நீராய் கரைந்தோடும் சுவடுகள்   
காற்றில் பறக்கும் சருகுகள்
கூனிக்  குறுகி  எரிகிறது மெழுகுவர்த்தி
இமை மூடி இருளைக்  கொய்கிறது என்  விழிகள்.
   
 
« Last Edit: September 24, 2019, 07:42:47 AM by SweeTie »

Offline KuYiL

வெள்ளை மெழுகுவர்த்தி !....

பேருந்து  ஜன்னலில்  அடித்த   
குளிர்    காற்றில் ...
கேசம்    கலைந்து   
முகத்தை மோதிய  போது...

கடந்து   போன  காலங்களை 
அசை     போட்டு ...
கனவு உலகத்தில் சஞ்சரித்த
என் நினைவுகள் கலைந்து ...
இமை மூடிய விழி திறந்து
பச்சை வயலாய் பசுமை
நிதர்சனகள் ...

நிறுத்திய பேருந்தில்
நில்லாமல் ஓடிய
ஆசைகள் பல சுமந்து
என் அன்பு காதலியை
காண வந்தேன் பல மைல் கடந்து ......

தாவணி பருவத்தில்
மலர்ந்த மொட்டாய்
மருதாணி குழைத்த
சிவந்த கன்னத்தில்
கள்ளத்தனம் இல்லாத
துடுக்கென்ற பேச்சில்
முத்துக்கள் சிதறிய சிரிப்பில் ,
மாணிக்க சொற்கள் ..

மூடிய இமை பறவை
சிறகை விரிக்கையில்
என் மனக்கடல் காதல்
காற்றில்  தத்தளிக்கும்
என் மோகங்களின்
தாப அலைகள் ....

காதில் மோதும் கம்மலும்
காலில் ஒலிக்கும் கொலுசும்
வீதி வழி நீ சென்றால்
எனைஅழைக்கும்
அழைப்பு மணி....

ஆசைகளின் வேகக்குதிரை
உந்தி தள்ள என் காலடிகள்
அவள் இல்லம் நோக்கி பறந்தன...
என் பாரிஜாத மலர்
நடந்து சென்ற வீதிகள்
என்னை கைதட்டி
வரவேற்பது போல் ஒரு உணர்வு...

அதோ வந்துவிட்டது என்
இதயராணியின் இல்லம் ...
எதோ அசம்பாவிதம் ...
நடந்தது போல் அத்துணை
ஜனங்களும் அங்கே சங்கமம்....

அபாய ஒலி மனதில் அடிக்க
ஓடிய கால்களை ஒரு நிமிடம்
நிறுத்தினேன்....
ஓப்பாரியின் ஓலம்
என்னை வரவேற்றது
அழுகையும் விசும்பலும்
என்னை ஆரத்தி எடுத்தன...
என்ன நடந்தது என்று
மனம் பட படத்தது....

உள்ளே சென்ற நான்
உறைந்து போய் நின்றேன் ...
வானவில்லாய் வர்ணஜாலம் காட்டிய
என் வண்ண மயில்
வெள்ளை புடவை போர்த்தி
உருகி வழியும் வெள்ளை
மெழுகுவர்த்தியாய் காட்சி அளித்தாள் ..

உடைந்து போன நான்
நடந்தவற்றை கேட்ட போது...
பிரிந்து சென்ற சில காலங்களில்
அறியாமையும் வறுமையும்
இல்லத்தில் தலைவிரித்தாட
இரண்டாம் தாரமாய் ஆனாள்
எதோ ஒரு கிழவனுக்கு...

கழுத்தில் கட்டிய தாலியின்
ஈரம் காயும் முன்னபே
முதுமை நோய் கொண்டு போன
கணவனை  எண்ணி இவள் ஏன்
சாக வேண்டும்.....?

வந்தோர் அனைவரும் துக்கம்
விசாரித்தார்கள் ..
அழுது புலம்பியோர் ஆறுதல்
சொன்னார்கள் ...
சாங்கியம் சடங்கும் அவளின்
வெள்ளை மனதை கிழித்து
ரணமாக்கியது.....

ஒரு கணமும் யோசிக்காமல்
அவளின்  கைபிடித்து சொன்னேன்
தன்னை உருக்கி சாகும்
வெள்ளை மெழுகுவர்த்தியில்லை இவள்..

இனி எப்போதும் வானவில்லாய்
வண்ணங்களோடு இனிய
வாழ்க்கை வாழப்போகும்
என் மனைவி இவள்......

உறைந்து போன உறவுகள்
முன்னே ..
காதல் வீரனாய் காதலியின் கை பற்றி.....









« Last Edit: September 27, 2019, 12:46:50 PM by KuYiL »