Author Topic: நிஜங்களை விட நினைவுகள் மேலானதே !!!  (Read 700 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நிஜங்களை விட நினைவுகள் மேலானவை.

நிஜங்கள் என்பது நிகழும் வரை மட்டுமே,

நினைவுகள் என்பது நேசம் கொண்ட இதயம்
இப்பூவுலகில்  வாழும் வரை நீடிக்கும்.

நேசம் கொண்ட மனிதர்கள் மாறி போன பொழுதிலும்,

நேசித்த நெஞ்சங்களின் நினைவுகள்
என்றும் மாறுவதில்லை.

நேசகர்கள் நம்மை விட்டு விலகி சென்றாலும்,

நேசம் அது என்றும் நம்முடன் நிலைத்து
நிற்கும் நினைவுகளாய்..

மனிதர்கள் மாறிப்போன பொழுதிலும், 
இதயங்கள் சுமந்த நினைவுகள் என்றும் மாறுவதில்லை...

ஆதலாலே !!!

நிஜங்களை விட நினைவுகள் மேலானதே...

நிழல் என்ற பொழுதும் நேசித்தேன், நிழல் அது நிஜமாகும் என்றல்ல,
நினைவுகள் ஆவது மிஞ்சட்டும் என்று  --- MNA...