Author Topic: Masha Siyanaa பிறந்தநாள் வாழ்த்துக்கள்  (Read 713 times)

Offline சிற்பி

பெண்ணே
நம் தமிழன்னை
முதன் முறையாக
மிகவும் பெருமைபட்டாள்
நீ பிறந்தபோது தான்
இந்த பூமியில்
அன்பு பிறந்தது
அழகு பிறந்தது
கவிதை பிறந்தது

அன்பே
உனது அழகை
வர்ணனை செய்திட
தன்னிடம் வார்த்தையில் லை
தமிழிடம் வார்த்தையில்லை

நீ மோனலிஸா ஓவியமாக
காளிதாஸ் காவியமா
இல்லை இல்லை
நீ பாரதி கண்ட
புதுமை பெண்

அழகே
நீ இதயங்களை
வலைவீசி பிடிக்கும்
விந்தையை யாரிடமிருந்து
கற்றுக்கொண்டாய்
உன் இதழ்கள்
பேசும் வார்த்தைகள்
கவிதைகளாகி
உயிர்வாழும்

நீ பூமியில் பிறந்த
வான் நிலா
என் இதயம்
வென்ற பெண் நிலா
நீ தமிழ் பேசும்
தத்துவ கவிதை

உன் கால்கொழுசின்
ஓசைதனில்
காவியங்கள்
பல நூறு
காலடி சுவடுகள் தான்
காப்பியங்கள்
ஐந்தாகும்

தாஜ்மகால்
காதல் பேசும்
காலம் காலமாக

ஆனாலும் அந்த
தாஜ்மகால்
காதலின் சோகம்
காதலின் ஏக்கம்
காதலனின் தோல்வி

நீ பிறந்த போது
ஒரு பெண்
அன்று பிறக்கவில்லை

இந்த உலகின்
எல்லா அழகும்
வந்து பிறந்தது

அன்புடன் பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

  சிற்பி....

« Last Edit: July 30, 2019, 10:18:10 PM by சிற்பி »
❤சிற்பி❤

Offline MaSha

உங்க வாழ்த்துக்களுக்கு உங்க கவிதைக்கும் மிக்க மிக்க நன்றி friend :)