செல்வங்களை இழந்துவிட்டு
வந்த கணவனிடம்
எவ்வளவோ கோபம் கொள்ளலாம்
ஆனால்...
செல்வங்களை தானே இழந்தாய்
நம்மிடம் சிலம்பு இருக்கிறது
பிழைத்து கொள்ளலாம்
என்று சொன்னால் கண்ணகி
இந்த உலகம் யாவையும் என்
சொல்லினால் சுடுவேன்
அது தூயவன் வில் அம்புக்கு
மாசென்று வீசினேன்
என்று சொன்னாள் சீதை
கம்பன் காப்பியத்தில்
சீதை பார்த்தேன்
வண்ணச்சிலம்பினிலே
கண்ணகி பார்த்தேன்
தேவியாம் தெய்வமாய்
கோதை பார்த்தேன்
கீதையில் கண்ணனின்
ராதை பார்த்தேன்
ஒரு பெண்மையின் பலம்
அவள் கணவனுடைய
நம்பிக்கையில் தான் இருக்கிறது
புதுமை பெண்களுக்கும்
புரட்சி பெண்களுக்கும்
வாழ்க்கை சுமையில்லை
சுகமான பயணம் தான்
இதயங்களில்
அவர் தம் எண்ணங்களில்
வாழ்வின் சாரம் இருக்கிறது
மங்கை மலர்
பாதங்களில் மனித இன சுவடுகள் தான்
இல்லறம் இல்லாமல்
எதுவும் இல்லை இந்த உலகில்