Author Topic: தேடல் 🧐  (Read 948 times)

தேடல் 🧐
« on: March 21, 2019, 11:52:31 PM »
வலிகளை வழிய விசாரிக்கும்...
உறவெனும் பெயர் கொண்டோரிடமெல்லாம்...
உடைந்தழுது...
உறைந்தமர்ந்து...
வருந்துவதேயில்லை..

வெற்றுப்புன்னகையோடு...
வெறுங்கதையாக சொல்லி வைக்கிறேன்...

கண்ணீர் தெளித்த
அவ்வெற்றுப்பாதையை நிரப்ப...
ஓர் தலைகோதலோ...
ஓர் மடிசாய்த்தலோ...
கட்டாய தேவை என்பதால்...
இப்போதெல்லாம் அழுவதேயில்லை....

உடைந்து அழுவதற்காகவாது...
உறவென்ற உண்மை ஒன்றை அடையவேண்டும்...
அதுவரை அழுவதற்கான காரணங்கள் நிச்சயம் என்னிடமில்லை...

பிழைகளோடு ஆனவன்...

Offline Guest 2k

Re: தேடல் 🧐
« Reply #1 on: March 22, 2019, 08:10:39 AM »
என்ன சொல்லவென்று தெரியவில்லை நண்பா. மனதை துளைத்தெடுக்கிறது இந்த கவிதை

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline MaSha

Re: தேடல் 🧐
« Reply #2 on: July 19, 2019, 11:07:48 PM »
"உடைந்து அழுவதற்காகவாது...
உறவென்ற உண்மை ஒன்றை அடையவேண்டும்...
அதுவரை அழுவதற்கான காரணங்கள் நிச்சயம் என்னிடமில்லை..."

அர்த்தம் உள்ள கருத்து! சிந்திக்க வைக்கிறது  :)