Author Topic: பேரன்பின்_கணங்கள்  (Read 802 times)

பேரன்பின்_கணங்கள்
« on: July 19, 2019, 07:59:34 PM »


அவ்வொரு பிரிவிற்கு பின்
அடிக்கடி தொடர்புகொள்ள
முற்படும் உன்னை
அநாயசமாக மறுதலித்திருந்தேன்,
காயம் செய்யும்
கலைகளில் மகிழும்
சாத்தான்மனம்.

நாட்கள் கடந்து
இப்போது உன் முறை,
பேசமுடியாது என்று சொன்ன பிறகும்
எதற்கு தொந்தரவு செய்துகொண்டிருக்கிறாய் என்கிறாய்.
உண்மையென்ன தெரியுமா?
உன் அகங்காரங்களை ஆற்றுப் படுத்துகிறேன்,
என்னை நிராகரிக்கும் வாய்ப்புகள் வழங்குகிறேன்,
உன்னையும் சாத்தான் ஆக்குகிறேன்.

தீர்க்கப்படாத கணக்கு
தீர்ந்த அகமகிழ்வில்
இனி நீ
அமைதிகொள்வாய்.
என்
மனமே....
பிழைகளோடு ஆனவன்...

Offline Guest 2k

Re: பேரன்பின்_கணங்கள்
« Reply #1 on: July 21, 2019, 06:06:38 PM »
பேரன்பின் கணங்கள் வலிகள் நிரம்பியவை  :). அருமையான கவிதை நண்பா

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்