மக்களே, நம்மளுடைய மன மகிழ்ச்சி என்பது நம்முடைய செயல்பாடுகளை மட்டும் பொறுத்தது இல்ல,
மாறாக நம்மல சுத்தி இருக்குற நம்மளோட உறவுகளையும் பொறுத்தது.
1) நமக்கு பிறர் என்ன செய்யக்கூடாதுனு நெனைக்குறமோ, அத நம்மளும் பிறருக்கு செய்யாமல் இருக்குறது நல்லம்.
2) நம்பள பத்தின புரிதல் நம்ம உறவானவங்க இடத்துல இல்லனாலும், நம்ப உறவா நினைக்குறவங்கள பத்தி நம்ப புரிஞ்சிக்க முயற்சி செய்தல் நல்லம்.
3) நம்பள நிராகரிக்க நெனைக்குற யாரையும், நம்ப நேசிக்க மறக்காம இருக்கணும்.
4) நம்பிக்கை துரோகம் மன்னிக்க முடியாதது, தவறுகள் மன்னிக்க கூடியதுதான், நம்ப தவறு செஞ்சவங்கள மன்னிக்கும் பட்சத்தில், நம்பள படைத்த இறைவனும் நம்பளோட தவறுகளை மன்னிக்கிறான்...
5) இது எல்லாத்தையும் விடவும் உறவுகள் பேணி வாழ்வதினாலும், புதிய உறவுகளோட தொடர்பினாலும் மனம் மற்றற்ற மகிழ்ச்சி கொள்ளும்...
எனவே மக்களே. நேசம் கொள்வதினால் மட்டுமே மனம் மற்றற்ற மகிழ்ச்சி தனை உணரும் என்ற சீரிய சிந்தனை கொள்வோம்....
நன்றி.......