குளிர் ! முகிலே முகிலே வருவாயோ,
மழை என்னும் முத்தங்கள் தருவாயோ !
கடும் வெயில் தனில் மக்கள் தத்தளிக்க,
மன மகிழ்ச்சி தர நீயும் வருவாயோ !
மழை என்னும் வளத்தை வரவழைக்க,
கார் முகிலே நீயும் வருவாயோ !
உழவனின் கவலை தனை நீக்கிடவே,
கார் முகிலே நீயும் வருவாயோ !
மக்கள் தன் மகிழ்ச்சி தனை உணர்ந்திடவே,
மழை என்னும் வளமே உறுதுணையே !
மழை என்னும் மாணிக்கத்தை பொழிவிக்க,
கார் முகிலே நீயும் வருவாயோ !
பூமிதானினை மகிழ்விக்க, கார் முகிலே நீ
மழையாய் பொழிந்துவிடு, மக்களின்
கவலை தனை நீக்கி விடு ................
இறைவா ! மக்களின் கஷ்டத்தை போக்கிட மழை பொழிய
அருள் செய்வாயாக ! உன்னை அன்றி வேறு உதவியாளன் இல்லை...... 💞💞 MNA 💞💞