Author Topic: நிமிட கோபத்தில்...  (Read 695 times)

நிமிட கோபத்தில்...
« on: May 27, 2019, 03:15:59 AM »
பாதங்களுக்கு கீழாக
பூமி நழுவத்துவங்குகையில் நிலைகுலைகிறேன்

அழுத்தங்கள் இன்னுமாய் சறுக்கலாகி
அடி இடறும் ஒரு புள்ளியில்
புலம்பல் நிறுத்தி

புலம்பல்களின் அதிர்வுகள் தாக்கிடாதவாறு
மௌனத்தின் போர்வைக்கொண்டு
என்னை போர்த்தி
அண்டத்தில் பேரமைதியாகிறேன்

என் கூச்சல்கள் எங்கோ
ரீங்காரமிட்டு மரித்துப் போகுமாகக் கடவது
பிழைகளோடு ஆனவன்...