Author Topic: ஒரு ஓவியம் உயிராகிறது  (Read 704 times)

Offline சிற்பி

கண்ணீரில் இருந்து
சிரிப்பு மலர்கிறது
இருளில் இருந்து
ஒளி பிறக்கிறது
ஒரு ஓவியம் உயிராகிறது
அது உலகின் ஒளியாகிறது
சிலையில் இருந்து
கடவுள் வருகிறார்
சிலுவையில் இருந்து
இயேசு வருகிறார்
பிறையில் இருந்து
நபிகள் வருகிறார்
ஒரு ஓவியம் உயிராகிறது
அது உலகின் ஒளியாகிறது
யாழினில் இசை பிறக்கும்
யாக்கையில் உயிர் பிறக்கும்
காதலில் இல்லறம்
பிரிவினில் துறவறம்
ஓவியம் பேசினால்
காவியம் உயிர்பெரும்
ஒரு ஓவியம் உயிராகிறது
அது உலகின் ஒளியாகிறது
❤சிற்பி❤

Offline Guest 2k

Re: ஒரு ஓவியம் உயிராகிறது
« Reply #1 on: May 22, 2019, 04:49:46 PM »
வாவ் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க சிற்பி. இன்னும் நிறைய அழகான கவிதைகளை உங்க கிட்ட இருந்து எதிர் பார்க்கிறோம்.

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்