Author Topic: எண்ணங்களின் மொழிபெயர்ப்பு  (Read 881 times)

Offline thamilan

தூரங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது பாதையானது
பாதைகளை நான் மொழிபெயர்த்தேன்
அதில் என் பயணம் தொடர்ந்தது

வாசங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது பூக்களானது
பூக்களை நான் பொழிபெயர்த்தேன்
அது வேர்களின் வலிமையை சொன்னது

எண்ணங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது சிறகானது
சிறகுகளை நான் மொழிபெயர்த்தேன்
அது சிகரத்தின் முகவரி தந்தது

பசுமைகளை நான் மொழிபெயர்த்தேன்
அது பயிரானது
பயிர்களை நான் மொழிபெயர்த்தேன்
அது உழவனின் உயிரானது

தோல்விகளை நான் மொழிபெயர்த்தேன்
அது தொடர்ந்து வந்தது
தொடர்ந்து நானும் மொழிபெயர்த்தேன்
அது வெற்றியை வாங்கித் தந்தது

துன்பங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது அனுபவமானது
அனுபவங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது ஞானமானது

உணர்வுகளை நான் மொழிபெயர்த்தேன்
அது வார்த்தைகளானது
வார்த்தைகளை நான் மொழிபெயர்த்தேன்
என் பேனாவின் மை தீர்ந்தது

Offline Guest 2k

வாவ் வாவ் வாவ்வ் அட்டகாசமான கவிதை தமிழ்

//
துன்பங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது அனுபவமானது
அனுபவங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது ஞானமானது - Beautiful

 

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்