நான் கவிதை என்று நினைத்தேன் 
உன்னைப்பார்த்ததும் தான் தெரிந்துகொண்டேன் 
நீ ஒரு காவியம் 
காதல் காவியம் என
பார்க்காமலேயே பிடித்தஉன்னை 
பார்த்ததும் பிடித்தது  எனக்கு 
பைத்தியம் காதல் பைத்தியம் 
நீ அழகாய் இருப்பாய் என்று நினைக்கவில்லை  
இவ்வளவு அழகாய் இருப்பாய் என்று 
நினைக்கவே இல்லை 
அழகு மனதில் இருக்கவேண்டும் 
உருவத்தில்  அல்ல 
என்று நினைப்பவன் நான் 
மனமும் உருவமும் அழகாய் இருக்கும் உன்னை 
பிடிக்காமல் போகுமா என்ன 
இதுவரை என்றாவது பார்ப்பேன் 
என்று நினைத்தேன் - இப்போதோ 
எப்போது பார்ப்பேன் என்று ஏங்குகிறேன் 
எப்போது வருவாய் என்று நீயும் கேட்கிறாய் 
வரத்தான் நினைக்கிறேன் 
வந்தால் என்னாகுமோ என்ற பயம் 
தேனை முன்னே  வைத்தால் 
தொட்டு ருசிக்கத்தானே மனம் ஏங்கும்
அமிர்தத்தை கையில் தந்தால்
அருந்தாத்தானே மனம் துடிக்கும்
அழகை அருகி வைத்தால் 
அள்ளி அணைக்கத்தானே கைகள் துடிக்கும் 
அழகுக் கொள்ளை கொண்டிருக்கும் 
கோதையர்பால் மனம் கவிந்தால்
குரங்காட்டம் ஆடாத குமரரும் உண்டோ
நீயோ என்னை நல்லவன் என்கிறாய் 
நல்லவனுக்கு ஆசை வராதா
காதல் வந்தால் காமம் வராதா 
காதலும் காமமும் ஒன்றரக் கலந்து தானே 
தேவதை போல தோன்றும் என் 
கவிதையான பாதகியே
நீயென் மன அரங்கில் 
குடிகொண்ட நாள் முதல் 
தீயைத்தான் பாயாக விரிக்கிறாய் 
இது பற்றி எரியும் 
காதல் தீ