Author Topic: முயன்றால் முடியாதது ஏதும் இல்லை  (Read 855 times)

Offline thamilan

சிறு பறவையொன்று
தன ஒற்றை சிறகினில்
இந்த மொத்த  உலகையும்
சுருட்டிக்கொள்ள முயற்சிக்கிறது

பெண் குழந்தையொன்று
மின்னல் கீற்றை கொண்டு
மெழுகுவர்த்தியை கொழுத்த முயற்சிக்கிறது

வாலிபன் ஒருவன்
விமானத்தை விட வேகமாக
ஓடவேண்டும் என முயற்சிக்கிறான்

பேருந்தில் வயோதிபர் ஒருவர்
சீறி வரும் சிறுநீரை
வீடு சென்றடையும் வரை
அடக்க முயற்சிக்கிறார்

இவை அனைத்துமே
முடியாது என்றாலும் 
முயற்சி அழகானது, அற்புதமானது
ஒரு நாள் வெல்லக் கூடியது

கவிதையும் இது போன்ற
ஒரு முயற்சி தான்
வாருங்கள் முயற்சி செய்வோம்   

Offline Guest 2k

காசா பணமா, முயற்சி தானே, செஞ்சிடுவோம். அருமையான கவிதை தமிழ்  :D

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்