Author Topic: நாட்குறிப்பு  (Read 874 times)

Offline Guest

நாட்குறிப்பு
« on: February 05, 2019, 04:40:22 PM »
நாட்குறிப்பு...
*********************************

குறித்து வைத்துக்கொள்ள
ஏதும் இல்லை இன்று - நாளைய
நாட்களிலேனும் சில
சொல்லும்படியாய் இருத்தல் வேண்டும்....
.
நானும்தான் உங்களோடு
பயணிக்கிறேன் - நீங்கள்
பார்த்து பரிதவித்து பதறிச்செல்லும்
என் இயலாமைகளை
வெளிச்சொல்லாமல்உள்ளுக்குள்ளே
மறைத்துச்செல்கிறீர்கள்....
.
என் நிஜம் கண்டு போதாமல்
என் நிழலில் துப்பிச்செல்லும்
இழிந்த செயலில் வீற்றிருக்கிறது
உன் விபரீத புத்தி...
.
காற்று பேசிச்செல்கிறது
ஈரமில்லா இதயங்களில்
வீசுவது வீணாகிப்போகிறதாம்
என் தேகத்தின் வெளியே துளிர்த்து
நிற்கும் நீர்த்திவலைகளில்
கொதித்தடங்கிய வெப்பத்தின் வீச்சு....
.
இயல்பான சில நிகழ்வுகளை
பதியமிட்டுச்செல்கிறேன்
தினமும் குறித்து வைத்து
புதிதாய் மாற்றங்கள்
செய்வதற்காகவல்ல....
.
ஆமாம் என்னோடு
ஒருமுறையேனும் ஏதேனும்
தூரத்தை குறித்த நேரத்தில்
கடந்து செல்ல முயலுங்கள்...
.

குளித்து முடித்தபின்தான்
உணரவியல்கிறது உடற்சூட்டின்
உஷ்ணக்காற்று வெளியாவதை
எங்கு நோக்கினும் எனைச்சுற்றி
யாருமறியாதொரு புகை மண்டலம்...
.
விழிகள் வெறுமனே
வெட்கித்துக்கொள்கிறது
பூட்டிய அறையினுள் வெற்றுடல்
திமிர்த்து நின்று உஷ்ணம்
களைந்து சுயம் குளிர்ந்துகொள்ள
முயலும்போதும் யாரோ
நோக்குவதாய் உணரும் வெட்கம்....
.
என் முயலாமைகளில்
வீற்றிருக்கிறது உன்
முயற்சியின் மூற்கமேறிய வெற்றிகள்
நான் நடந்த பாதைகளில்
உன் பாதச்சுவடுகள் ஆழ்குழிகளாய்
பதிந்து கிடக்கிறது...
.
படுகுழிகளில் வீழும்
என் பார்வைகளில்
என் முகங்களே தெரிகிறது
மீண்டும் மீண்டும் எழுந்து
வீழ்ந்துகொண்டிருக்கிறேன்....
.
பெரிதாய் குறித்துவைத்துக்கொள்ள
ஏதுமில்லை என்கின்ற
ஏக்கமேதுமின்றி நாளையநாட்களை
நோக்கி நகர்ந்துகொண்டுள்ளேன்.....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ