Author Topic: நான் நானகவே தொடர்கிறேன்.....  (Read 1044 times)

Offline Guest

நீ என்னவாக எண்ணுகிறாயோ அதுவாகிறேன்.
தவிப்பாகி
என்னை தேடுகையிலும்
உனக்கான இடம்
மாயை என்றெண்ணி விலகமுயலுகையிலும்,
நீ வெளிப்படுத்தும் முன்னரே
பிரேத்தியேக அலைவரிசைகளின் அதிர்வெண்களினூடே
தகவலுணர்த்தும்
உன் அறிகுறிகளை
உணர்ந்துக்கொள்கிறது மனம்

நானாக தொடர்தல்
பல நேரங்களில்
அமிழ்த்திப்போகும் அன்பாகிறதென
நிறைவு கொள்கிறாய்

சில நேரங்களில் இம்சிக்கும் மாயையாகிறதென
மௌனம் கொள்கிறாய்

என்னை என்னவென
எண்ணுகிறாயோ 
அப்பொழுதுகளில்
அதுவாகிறேன் நானுனக்கு...

எதுவாகினும்..
குறைகளால் இம்சித்து
பின் நிறைகளால் நிறைக்கும்
உன் இன்னொருபொழுதை  எதிர்ப்பார்த்தே 
தன்மை மாறாமல் 
தொடர்வேன் நான்...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ