Author Topic: சின்ன குழந்தையாகவே …….இருந்திருக்கலாம் ….ல  (Read 2981 times)

Offline Yousuf

“கன்னத்தில் வைக்கும்
திருஷ்டி போட்டு ….
அழுதால் சாப்பாடு …..
அடிக்கடி முத்தங்கள் …
நிறைய செல்ல பெயர்கள் ….
நீண்ட உறக்கம் ….
யாரும் தூக்கி
வைத்துக் கொள்வார்கள் …..
தத்தி தத்தி
பேசும் அழகுதமிழ்…..
தரையில் விட்டதில்லை ….
யாரைப் பார்த்தும்
சிரிக்கலாம் …..
நிலா காட்டி சோறு ….
இரவு தாலாட்டு ……
ஊசி இல்லாத மருத்துவம் …..
அதிக சிந்திக்காத மூளை …
வெட்கப்படாத
ஆடை நிர்வாணங்கள்……
பாட்டி வடை சுட்ட கதை ….
சுகமில்லாமல் நான்
தூங்கினாலும் …விழித்திருக்கும்
அம்மா…..
நாளை பற்றி
இல்லாத பயம் …..
…….ச்..ச்ச ……..
சின்ன குழந்தையாகவே ….
…இருந்திருக்கலாம் ….ல …..

Offline Global Angel

aamala ... mooku sinthikitu... weeee nu aluthukitu kai soppikitu eruntherukalam  ;D ;D ;D ;D ;D