Author Topic: Online jokes ;D ;D ;D  (Read 2564 times)

Offline regime

Online jokes ;D ;D ;D
« on: November 22, 2018, 10:06:12 AM »
 

“பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எதுக்கு சீக்கிரம் முடிவைச் சொல்லச் சொல்றாங்க?”

“பிடிச்சிருந்தா, அவங்க வாட்ஸ்அப் குரூப்ல சேர்த்துப்பாங்களாம்!”



 “நல்ல கதை கிடைச்சா சம்பளம் வாங்காம நடிப்பேன்!”

“இதுவே நல்ல கதையா இருக்கே!”



அந்தப் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தனுப்புங்கள் அமைச்சரே!``

``அவர் இன்னும் பாடவே இல்லை மன்னா!``

``அவர் பாடி, என் காதில் ரத்தம் வந்து,  டாக்டருக்கு  பத்தாயிரம் பொற்காசுகள் கொடுப்பதைக் காட்டிலும் இது எவ்வளவோ மேல்!``



``பசங்களா... தீபாவளிக்கு, பாட்டி ஊருக்குப் போனீங்களே... என்ன பார்த்தீங்க?``

``போகோவும் சின்சானும்!''