ஆழம் கொண்ட கடல் நீ..
எனக்கு தெரிந்ததெல்லாம்
மேலோட்டமான பேரமைதியும்
ஆர்ப்பரிக்கும் சில அலைகளும் மட்டுமே.
முத்துகுளிப்பதாய் மூச்சடக்கி
மூழ்க முயலுகையில்
ஆழம் உணர
இடைவெளிகளில் மிதக்கிறேன்..
ஆழங்களின் பரிணாமத்தை
அனுமானங்களில்
அளவீடு செய்துகொள்கிறேன்.
அச்சமூட்டும் பேரமைதியில்
தத்தளித்து நகருகையில்
இயலாமை உணர்த்தி
துரத்த துவங்குகிறது சுயம்.
நீ வசப்படா சமுத்திரம்
நான் சாமான்யன்.