என் தோழியே
உனக்காக சில வரிகள்
இதில் மறைந்திருக்கும்
என் கண்ணீர் துளிகள்
காலந்தாழ்ந்து என்
தவறை உணர்ந்தேன்
உன்னிடம் மன்னிப்புகோரும்
அருகதை இழந்தேன்
நட்பென்னும் மழை
நம் மீது பொழிந்தது
அதில் நனைந்து
மூன்று வருடம் கழிந்தது
தனிமையின் தாக்கத்தினால்
தவித்திருந்த தருணத்தில்
தலைசாய்த்து தழுவிக்கொள்ள
தோள் தந்தாய் தோழி!
தடுமாறி நின்றபோது
தோள்தட்டி தழுவினாய்
தவறிழைத்த நின்றபோது
தலைத்தட்டி திருத்தினாய்!
உள்ளம் முழுவதும்
உற்சாகத்தில் நிரம்ப
உணர தொடங்கினேன்
உன் உன்னதமான நட்பை!
எனக்காக நீ சிந்தின கண்ணீர்
தினமும் என் மனதில்
மழையாககொட்டி
அது , இன்று கடலாக
மாறியது !!
உன் மௌனம் என்னை வாட்டியது
உன் கோபம் என்னை தலை குனிய செய்தது
நான் செய்த தவறை உணர வைத்தாய்
தடம் மாறிய பொழுது என்னை மாற்றினாய்
உலகத்தில் காதல் மனைவி குடும்பம் இவை அனைத்தும்
தாண்டி நட்பே உன்னதமானது என்று
உன்னிடம் கற்று கொண்டேன் !!
தோழி
நம் நட்பின்
ஆழம்
நமக்கு மட்டும்
தான் தெரியும்
எத்தனை பேச்சுக்கள்
எத்தனை சண்டைகள்
எத்தனை கோபங்கள்
எத்துணை சண்டை வந்தாலும்
கடைசி நிமிடத்தில் மீண்டும்
ஒரு ரயில்தடம் போல்
பிரியாதடமாக இணைந்து செல்லும்
தொடர்பெட்டி தான் நம் நட்பு
சிறகு கிடைத்த உடன் பறப்பது அல்ல நட்பு
சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு
என்று உன்னிடம் கற்றுக்கொண்டேன்
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு
என்றும் பிரிய கூடாது நம் நட்பு
அம்மா என்னை வயிற்றில் சுமந்தாள்
அப்பா என்னை தோளில் சுமந்தார்
காதலி என்னை இதயத்தில் சுமந்தாள்
என் தோழியே!!
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
அளவின்றி அன்பை
அள்ளி தந்தவளே
என் ஆயுள் முழுவதும்
அதை எதிர்பார்க்கிறேன் !
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது!!